பிடித்தவை:-
சென்ற வாரம் திருப்புர் சென்றிருந்தேன்..அங்கு சிறிது நேரம் பேருந்து நிலையத்தில் இருந்தேன்....பேருந்து நிலையத்தில் பஸ்களில் விற்கும் சில நபர்களை பார்த்தேன்...
அவர்கள் பழங்களை நறிக்கி கொன்டு இருந்தார்கள் கையில் உறையுடன்...

பிடிக்காதவை:-
சனடக்கிழமை இரவு மதுரை செல்வது....
ஞாயிறு இரவு கோவை வருவது.....

என்ன இருக்குனு சுதந்திர தினம் கொண்டாடணும் நான்..

ஒரு வாரத்துக்கு முன்னாடியில இருந்தே வர ஆரம்பித்து விட்டது சுதந்திர தின கொண்டாட்டங்கள். அலுவலகத்தில் பாரத விலாஸ் மதிய சாப்பாடு, நாட்டுப்பற்றை தெரிவிக்கும் உடைகள் அணியும் போட்டி, காலை கொடியேற்றல், வித வித கலர்களில் பல மின்னஞ்சல்கள், இந்தியாவின் புகழைப் பற்றி, இந்தியாவின் வெவ்வேறு கலாச்சாரங்களைப் பற்றி, முதல் சுதந்திர தினத்தின் புகைப்படங்கள், இப்படி இன்னும் எத்தனையோ.. அதோடு குறுந்தகவல்கள், டிவியில் சிறப்பு நிகழ்ச்சிகள், பள்ளிகளில் மார்ச் பாஸ்ட், இன்று மட்டும் விற்பனையாகும் தேசிய கொடிகள், எங்கு பார்த்தாலும் மூவர்ணத்தில் உடைகள், கொண்டாட்டங்கள்..

வழக்கமாக ஒரு கிராமத்திற்கு சென்று, அங்கு நடக்கும் விழாக்களில் கலந்து வருவது வழக்கம். இந்த முறை அப்படி ஏதும் நடக்கவில்லை. ஏதோ ஒரு வெற்றிடம் அதிகமாக இருந்தது. தேசிய கொடியைக் குத்திக் கொண்ட போதும் அத்தனை நாட்டுப்பற்று பொங்கவில்லை.

நிலவி வரும்
தொலைக்காட்சி .. / சினிமா.. / மீடியா…
• “Z” தொலைக்காட்சியில் சுதந்திர தின விழாவிற்கு முந்தையை தினம் தேசப்பற்று பெருக்கெடுத்து பொங்க வைக்கும் படம் “காதல் என்றால் என்ன” என்ற திரைப்படம் திரையிட்டார்கள்.. விஷ்வா, தியாவின் தேசப்பற்று புல்லரிக்க வைத்தது..

• ஆனந்த விகடன் (19/8) இதழில் 40ம் பக்கம் சத்குரு வாசுதேவ் அவர்களின் தொடர் வெளியானது. அதற்கு முந்தைய பக்கத்தில், நனைந்து இருக்கும் ஒரு பெண்ணின் புகைப்படத்தை போட்டு அவர்கள் கொடுத்து இருக்கும் வாசகம் இது தான்.. “புறமுதுகு பார்ட்டியை கண்டுபிடிச்சீங்களா(அது வேற போட்டோ).. இப்போ அடுத்த சவால்.. நனைஞ்சிருந்தாலும் நான் செம ஹாட் நாட்டுக் கட்டை” எனும் இந்த பியர்ல் ப்யூட்டி யார்.. பத்த வைக்கிற பாருன்னு பார்க்க பக்கம்..47” .. அட இப்போ தான் கவனித்தேன்.. அடுத்த பக்கத்தில் இதை விட ஏகபோக கேள்வி..

• நம்ம நிமீதா அக்காவின் திரைப்படமான இந்திர விழாவில் அவர் கொடுத்த தெய்வீக புகைப்படங்கள் எல்லாப் பெண்களையும் பெருமை படுத்தியது. இதில் வேறு அனைவரையும் மச்சான் என்று சொல்லி அவனையும் கேவலப்படுத்தறா.. காசி தியேட்டரில் வெளியிட்ட அந்த பெரிய பேனரில் போவோர் வருவோர் கவனம் சிதறியடிக்கப்பட்டது.. நிர்வாணப் புகைப்படத்தை விட கேவலமாக இருந்த அதை யாரோ பாவி கொடுத்த புகாரின் பெயரில் எடுத்து விட்டார்களாம் பாவம். அதே ஆனந்த விகடனில், நமீதாவின் புகைப்படத்திற்கு கீழே இருக்கும் ஒரு சின்ன கார்ட்டூன் கமெண்ட் ( க்ளோபல் வார்மிங்கிற்கு நீங்களும் ஒரு காரணம்.. ) – இது உங்களுக்கு புரியலைன்னா.. இந்த சமுதாயத்தை விட்டு நீங்க ரொம்ப தூரத்தில இருக்கீங்கனு அர்த்தம்..

• NDTV யின் சமீபத்திய சாதனை “ராக்கி சாவந்தின் சுயம்வரம்”.. இந்தி நிகழ்ச்சி.. கவலை படாதீங்க.. விரைவில் விஜய் டிவியும் அதை தொடர்ந்து கலைஞர் டிவியிலும் அது போல நிகழ்ச்சிகள் வரலாம். கரு இது தான். ஒரு பெண்ணின் சுயம்வரம் ரியாலிட்டி ஷோவாக நடைபெறும்.. போட்டியில் பங்கு பெறும் நேயர்களில் இருந்து ஒருவரை தேர்ந்தெடுத்து அவரை நேரடி ஒளிப்பரப்பில் மணந்து கொள்வார். ராக்கி சாவந்த்(rakhi sawant) தெரியாதவர்கள் கூகிலிட்டு அவரைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். இதில் மற்றுமொரு பெருமையான விஷயம் – இவரை மணந்து கொள்ள விண்ணப்பங்கள் வந்த மொத்த எண்ணிக்கை இருபது ஆயிரம். இன்னும் சொல்றேன் கேட்டுக்கோங்க.. வடிகட்டிய போட்டியாளர்கள் சிலருடன் ஒருவருக்கு ஒரு நாள் வீதமாக ராக்கி டேட்டிங் (Dating) செல்வார். அப்படி செல்லும் போது முத்தமிடலாம், நடனமாடலாம், பரிசு கொடுக்கலாம். இதெல்லாம் பிடித்தால் அம்மணி அடுத்த ரவுண்டுக்கு அவரை செலக்ட் செய்வார். தரமான நிகழ்ச்சி என்பதால் எந்த படுக்கையறை காட்சிகளும் ஒளிப்பரப்பவில்லை என்று பலரும் வருந்துகிறார்கள்.

• இதெல்லாம் பாக்குறப்போ நம்ம மெகா சீரியல் பரவாயில்லை தானேனு யோசிக்கறவங்க – தயவு செய்து கவணிக்கவும். இரண்டு பெண்டாட்டி அல்லது புருஷன், ஜெயில் காட்சிகள், பழி வாங்கும் காட்சிகள், கொலை செய்யும் குரூர குணம் படைத்த ஒரு வில்லன் / வில்லி, தேமே என்று அழுவதற்காக ஒரு கதாப்பாத்திரம், பெண்டாட்டியை தவிர வேறு ஒருத்தியுடன் உறவோ அல்லது காதலோ இருக்கும் ஆண், கணவனையே சவால் செய்யும் பெண்கள் - - - இது எதுவுமே இல்லாத ஒரு மெகா சீரியல் ஒண்ணு சொல்ல முடியுதா பார்ப்போம்.. ஆனா சொல்லிக்கொள்வது மட்டும் குடும்ப பாங்கான நாடகமாம். எந்த குடும்பத்தில இப்படி எல்லாம் நடக்குதோ..

• இதுக்கு மேல இல்லைன்னு நினைக்காதீங்க.. இன்னும் சொல்ல வேண்டியது நிறைய இருப்பதால், பின்னூட்டங்களில் தொடரலாம் இன்னும் இது போல ஏராளமான கருத்துக்களை..

சமுதாயம்..

• தீவிரவாதம், வள்ளுவர் சிலை எழுப்பினதுனால தகராறு, மாநிலங்களுக்குள் தண்ணி தகராறு, மொழிக்காக தகராறு, சொந்தகாரங்களிக்குள்ள தகராறு, கட்சிகள் தகராறு, கட்சிகளுக்குள் பதவிக்கு தகராறு, அண்ணன் தம்பி சொத்து தகராறு, புருஷன் பொண்டாட்டி தகராறு, இந்த ஊர் சைனாவுக்கா, இந்தியாவுக்கா னு கூகுளோடு தகராறு, ஒரே அலுவலகத்தில் ப்ரொமோஷனுக்காக தகராறு, ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் தகராறு – சொல்லிக்கிட்டே போகலாம்.. தகராறு மட்டும் தான் வரலாறில் இருக்க போகிறது..

• எப்போதும் நிரம்பி வழியிம் டாஸ்மாக் கடைகளை நான் தினம் தினம் கடந்து தானே செல்கிறோம். காலியான டாஸ்மாக் கடைகளை காண்பதே அரிதாகத் தானே இருக்கிறது. அத்தனை வருமானம் ஈட்டுவதால் தானே சம்பள உயர்வு. ரிசஸ்ஷன் எல்லாம் டாஸ்மாக்கை தீண்ட முடியுமா?

• காலை 9 மணியளவில் அரசு போக்குவரத்து பேருந்துகளில் பயணித்து உள்ளீர்களா.. 40 பேர் ஏற்றிச்செல்ல வேண்டிய பேருந்தில் 40 பேர் புட்போர்டில் மட்டும் தொங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.. நெரிசல் என்ற வார்த்தையை தவிர வேறு வார்த்தை இல்லை இதை விவரிக்க.

• அந்த நெரிசலிலும் தன் காம இச்சைகளை தீர்த்து கொள்ளும் புழுக்களை 98 சதவிகித பெண்கள் சந்தித்து இருப்பார்கள். இதைப் பற்றிய கதையை படித்த பல பெண்கள் தனியாக என்னிடம் தாங்கள் சந்தித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள்.

• சின்ன சின்ன தோல்விகளுக்கெல்லாம் “ஐய்யோ எனக்கு செத்து போயிடலாம் போல இருக்கு”, “ஐய்யோ வீட்ட விட்டு எங்கயாச்சும் போயிடலாம்” என்று அடிக்கடி சலித்து கொள்ளும் இளைஞர்களுக்கு என்ன தன்னம்பிக்கை கற்றுக் கொடுத்துள்ளது இந்த கல்வி / சமுதாயம்

• கிரெடிட் கார்ட், சாடர்டே நைட் பார்ட்டி, சோஷியல் ட்ரிங்கிங், டேட்டிங், டிஜே, ட்ரீட் – இப்படி புதுப்புது யுத்திகளில் சென்று கொண்டிருக்கும் நாகரீகம்.

• களத்தில் சென்று வேலை செய்யாமல், இதுங்க உருப்படாது என்று வியாக்கானம் பேசும் என் போல் சிந்தனையாளர்கள்.

- சிந்தனை.. கேள்விழி (திவ்யா செந்தமிழ் செல்வன்)

2009-08-15

Online Tamil Radios